தினகரன் கட்சியில் இருந்து விலகினார் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் நேற்று திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று அமமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வேலூர் சி.ஞானசேகரன் திமுகவில் இணைந்தார். அவருடன் அமமுக இளைஞர் அணி துணை பொதுச்செயலாளர் ஜி.எம்.ஏழுமலை, வேலூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் எஸ்.எம்.சுந்தரம், முன்னாள் தமாகா மாநில இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.சதீஷ், அமமுக மாவட்ட ஓட்டுநகர் சங்கச் செயலாளர் ஜி.வாசுதேவன், தமாகா முன்னாள் வேலூர் நகர செயலாளர் பி.சக்திவேல், வேலூர் மாநகர முன்னாள் கவுன்சிலர் வி.ஜி.தெய்வசிகாமணி, தமாகா நகர இளைஞர் அணி முன்னாள் தலைவர் எஸ்.எம்.கணேசன், முன்னாள் கவுன்சிலர் சத்துவாச்சாரி டி.ராமசாமி, மாவட்ட முன்னாள் தமாகா துணைத் தலைவர் ஏ.கமலக்கண்ணன்,

த.மா.கா. மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை தலைவர் வழக்கறிஞர் ஏ.ராஜேஷ், மாவட்ட முன்னாள் தமாகா எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ஆர்.குணசேகரன், மாவட்ட முன்னாள் தமாகா சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜான்ஸ்டீபன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அமமுக, காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ., வேலூர்மாநகரச் செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு செயலாளர் தி.அ.முகமதுசகி ஆகியோர் உடனிருந்தனர். திமுகவில் இணைந்த ஞானசேகரன் வேலூர் தொகுதியில் 4 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர். அதாவது, 1991 முதல் 2011 வரை தொடர்ந்து 20 ஆண்டுகள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: