தஞ்சாவூர் கலை பண்பாட்டு மையத்திற்கு 100 லட்சம் செலவில் புதிய கட்டிடம்

சென்னை: கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகம், தொல்லியல் துறை சம்பந்தமான மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய தமிழ்ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் ெவளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு: தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையத்திற்கு ரூ.100 லட்சம் ெசலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.  தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கு ரூ.100 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும். கலை பண்பாட்டு துறைக்கு சொந்தமான கட்டிடங்களை பராமரிக்க ஒதுக்கப்படும் தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.80 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

 கலைமாமணி விருது பெற்று வறுமை நிலையில் உள்ள மூத்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக வழங்கப்படும் பொற்கிழி தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப பராமரிப்பு உதவித் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.  அருங்காட்சியகம் துறைகள்: சென்னை அரசு அருங்காட்சியத்தில் உள்ள சிற்ப பூங்காவை மேம்படுத்துதல், சிற்ப பூங்கா அமைக்கும் பணிக்கு ரூ.70 லட்சம் ஒதுக்கப்படும். சென்னை அரசு அருங்காட்சியத்தில் புனைமெய்யாக்கம் மெய்நிகர் காட்சி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் ரூ.100 லட்சம் ெசலவில் ஏற்படுத்தப்படும்.

தொல்லியல் துறை: தமிழ்நாட்டில் உள்ள கலாச்சார மரபினை வெளிக் கொண்டுவரும் வகையில் தொடர் தொல்லியல் கழஆய்வுகள் மற்றும் அகல்ஆய்வுகள் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். ஐராவதம் மகாதேவன் நினைவாக ஆண்டு தோறும் ரூ.30 லட்சம் செலவில் பண்டைய தமிழ்பண்பாடு மற்றும் மரபு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்படும்.

Related Stories: