கோதாவரி - காவேரி இணைப்பு வரைவு திட்ட அறிக்கை பரிசீலனை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: 2019-2020ம் ஆண்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள 29 மாவட்டங்களில் ரூ.499 கோடியே 69 லட்சம் மதிப்பில் 1,829 பணிகள் மேற்கொள்ளப்படும். கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நீண்டகால கனவுத்திட்டமான அத்திக்கடவு  - அவிநாசி திட்டத்தை நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டமாக ரூ.1,652 கோடியில் செயல்படுத்த அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்க திருவள்ளூர் மாவட்டம், கண்ணன்கோட்டை கிராமத்தில், தேர்வாய்கண்டிகை ஏரி கட்டுமானப்பணி விரைவில் நிறைவு பெறவுள்ளது. இந்தாண்டு பருவமழை நீரை தேக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவேரி - வைகை - குண்டாறு மற்றும் பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.   கோதாவரி (ஈச்சம்பள்ளி / ஜனம்பேட்) -  காவேரி (கல்லணை) இணைப்பிற்கான வரைவு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைத்து அதன் மீது கருத்துக்களை கேட்டுள்ளது.  இந்த வரைவுத் திட்ட அறிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா நினைவிடத்தை மிக பிரமாண்டமாக வியக்கும் வண்ணம் சிறப்பு மிக்க வடிவமைப்புடன் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் 2019க்குள் கட்டி முடிக்கப்படும்.  கரூர் மருத்துவ கல்லூரி மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடம் சென்னை டிபிஐ வளாகத்தில் கட்டும் பணி சிறப்பாக கட்டப்பட்டு வருகிறது.

Related Stories: