11 நாளில் 1.82 லட்சம் பேர் அமர்நாத் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: அமர்நாத் பனிலிங்கத்தை கடந்த 11 நாட்களில் 1,82,712 பேர் தரிசனம் செய்துள்ளனர்.  இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனிலிங்க யாத்திரை கடந்த மாதம் ஜூன் 30ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு யாத்திரைக்காக நாடு முழுவதிலும் இருந்து 1.85 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் 8,374 பேர் பனிலிங்க தரிசனம் செய்தனர். கடந்த 11 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 712 பேர் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் 5,210 பேரை கொண்ட 14வது குழு, நேற்று ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றது. பலத்த பாதுகாப்புடன் 222 வாகனங்களில் இந்த குழுவினர் புறப்பட்டு சென்றனர். 46 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவடைகிறது.


Tags : Amarnath Panilinga darshan ,Jammu
× RELATED ஜம்மு காஷ்மீரில் பல மாதங்களுக்கு...