குருவாயூர் கோயிலில் மாயமான சங்கு கொரியரில் திரும்பியது

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயிலில் இருந்து மாயமான பூஜைக்கு பயன்படுத்தப்படும் சங்கு கொரியர் மூலம் திரும்பி வந்துள்ளது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த கோயிலில் பூஜையின்போது சங்கு பயன்படுத்தப்படும். இந்த சங்கு பயன்படுத்தப்பட்ட பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள மேலாளர் அலுவலகத்தில் வைக்கப்படும். இது பக்தர்கள் கைக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கும்.

இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென அந்த சங்கு காணாமல் போனது.

இந்த நிலையில் மாயமான அந்த சங்கு கொரியர் மூலம் ேகாயிலுக்கு வந்தது. அதில் ஒரு கடிதமும் இருந்தது. அதில் ‘மன்னிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கொரியர் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது. கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுடன் வந்த குழந்தைகள் தெரியாமல் அந்த சங்கை எடுத்திருக்கலாம். வீட்டிற்கு சென்ற பிறகு அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியவர்கள், இறைபக்தியால் அந்த சங்கை கொரியரில் திருப்பி அனுப்பி இருக்கலாம் என்று கோயில் அதிகாரிகள் கருதுகின்றனர்.

Related Stories: