×

சமாஜ்வாடி மூத்த தலைவர் எம்.பி. பதவி ராஜினாமா: பா.ஜ.வில் சேர திட்டம்?

புதுடெல்லி: சமாஜ்வாடி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி நீரஜ் சேகர், தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இவர் பா.ஜ.வில் சேரலாம் என கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன் நீரஜ் சேகர். இவர் 2 முறை மக்களவை எம்.பி.யாக இருந்தவர். சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை எம்.பியாக கடந்த 2014ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பரில் முடிகிறது. இந்நிலையில் இவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நேற்று அளித்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர் பா.ஜ.வில் சேரலாம் என கூறப்படுகிறது.


Tags : Samajwadi Senior Leader, MP
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...