மேகாலயாவில் கனமழை 1.14 லட்சம் பேர் பாதிப்பு

துரா: மேகாலயாவில் தொடர்ந்து 7 நாட்களாக மழை பெய்து வருவதால் சுமார் 1.14 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகாலயாவில் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தொடர்ந்து 7 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த மழை காரணமாக ஆறுகளில் அபாயக் கட்டத்தை தாண்டி நீர்மட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது.  தெம்டேபா பிரிவில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த 57,700 பேர், செல்செல்லா பிரிவில் உள்ள 104 கிராமங்களை சேர்ந்த 66,400 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான இடங்களில் வசித்தவர்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல்வர் கன்ராட் சர்மா நேற்று முன்தினம் வான்வழியாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

Related Stories: