டிடிவி.தினகரன் பேட்டி நிலையான சின்னம் கிடைத்த பிறகு தேர்தலில் போட்டி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நேற்று அளித்த பேட்டி:  தேர்தல் நேரத்தில், மக்களுக்கு எதிரான திட்டங்களை எடப்பாடி அரசு செயல்படுத்தாது. தற்போது சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்து, 9 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, ஆட்சி நீடிக்கும் என்பதால், 8 வழிச்சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார். இதற்கு மக்கள் நிச்சயம் ஒரு முடிவு கட்டுவார்கள். கட்சியை பதிவு செய்த பிறகு, ஒரே சின்னம் கிடைத்த பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: