நீலகிரி மலை ரயில் பாரம்பரிய தினம் கொண்டாட்டம்

குன்னூர்:  நீலகிரி மலை ரயிலுக்கு கடந்த 2005 ஜூலை 15ல், யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது. இதையொட்டி மலை ரயில் பாரம்பரிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக குன்னூர் ரயில் நிலையம் அலங்கரிக்கப்பட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து 1914ல் சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு 1918ல் இங்கு கொண்டுவரப்பட்டு நூற்றாண்டுகளாக ஓடிய ரயில் இன்ஜின் அலங்கரிக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ரயில் இன்ஜின் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: