×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பச்சிளம் குழந்தை வீச்சு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கழிவறையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது.  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் காலை 6 மணியளவில் அந்த கழிவறைக்கு சென்றார். அப்போது, அங்கு குழந்தை அழுகுரல் கேட்டது. உடனடியாக மற்ற தொழிலாளர்களும் ஓடி வந்து பார்த்தனர். அங்கு துணியில் சுற்றிய நிலையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, ரத்தத்துடன் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த ஆயுதப்படை பெண் ேபாலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊழியரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில் பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்ற கொடூர தாய் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Thiruvannamalai, Collector's Office, Pachilam Child
× RELATED ஆரணி சூரியகுளம் பகுதியில் கழிவுநீர்...