கஞ்சா வாங்க படகில் வேதாரண்யம் வந்த இலங்கை ஆசாமி கைது

வேதாரண்யம், ஜூலை 16: இலங்கை வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (40). இவர் ஏற்கனவே சேலம் முகாம் சிறையில் இருந்தவர். இவர் உள்பட 3 பேர் வேதாரண்யம்-கோடியக்கரை இடையே உள்ள மணியன்தீவில் கஞ்சா வாங்குவதற்காக படகில் வந்துள்ளனர். பார்த்தசாரதி மது அருந்தியபடி வந்துள்ளார். மணியன் தீவு அருகே நேற்று அதிகாலை வந்தபோது படகிலேயே பார்த்தசாரதி படுத்து தூங்கிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் பார்த்தசாரதியை அடித்து படகிலிருந்து கரையில் வீசிசென்று விட்டனர்.  போதை தெளிந்து கள்ளிமேடு அருகே பார்த்தசாரதி சென்றபோது கியூ பிரிவு போலீசார் அவரை பிடித்து கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: