தமிழக துணை ராணுவ வீரர் காஷ்மீரில் தற்கொலை

கூடலூர்: கூடலூரை சேர்ந்த துணை ராணுவ வீரர் காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நீலகிரி மாவட்டம். கூடலூர் காசிம் வயல் பகுதியை சேர்ந்தவர் துணை ராணுவ படை வீரர் ராம்குமார்(31). இவர் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இயந்திர துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குடும்ப பிரச்னை காரணமாக ராம்குமார் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ராம்குமாரின் தந்தை  பழனிச்சாமி கூடலூர் அரசு போக்குவரத்து கழக டிைரவராக பணியில் இருந்தபோதே மாரடைப்பால் இறந்துள்ளார். ராம்குமாருக்கு கவிதா  என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 4 வருடமாக ராம்குமார் மனைவி கவிதாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது இவரது தங்கை வீட்டில் தங்கி செல்வது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விடுமுறையில் கூடலூர் வந்த இவர் கடந்த மாத இறுதியில் பணிக்கு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காஷ்மீர் பகுதியில் அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகள் பாதுகாப்பு பணியில் இருந்த அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

Related Stories: