1 கோடி தங்கம் கடத்தல் தமிழர்கள் 6 பேர் கைது

திருவனந்தபுரம்: மாலத்தீவில்  இருந்து நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பயணிகள், 3 கிலோ தங்கத்தை புரோட்டீன் பவுடரில் கலந்து பசைபோல் மாற்றி மலத்துவாரத்தில்  மறைத்து வைத்திருந்தனர்.  இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். விசாரணைக்கு பிறகு 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விவரம்  வருமாறு:  சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாகுல் ஹமீது (32), ஷாருக்கான்(20),  ஜின்னா(30), பாசீர்(47), அன்சாரி(45), யாகூப் அலி(47) ஆகியோர் என்பது  தெரியவந்தது.

Advertising
Advertising

Related Stories: