மதுரை: மதுரை, நாகமலை புதுக்கோட்டையை ேசர்ந்த சோம்நாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழக மருத்துவக்கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படும். எனது மகன் நீட் தேர்வில் 93.7 சதவீத மதிப்பெண் பெற்றார். இதன்மூலம் அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைப்பது உறுதியானது. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 1,800 இடங்கள் உள்ளன. இதில் 562 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். இந்த இடங்களில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களை ெகாண்டே நிரப்ப வேண்டும். ஆனால், இதுகுறித்து மாணவர் சேர்க்கை குறிப்பில் எதுவும் குறிப்பிடவில்லை.