×

எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீடு கவுன்சலிங் ரத்து கோரி வழக்கு: விளக்கம் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை, நாகமலை புதுக்கோட்டையை ேசர்ந்த சோம்நாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழக மருத்துவக்கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படும். எனது மகன் நீட் தேர்வில் 93.7 சதவீத மதிப்பெண் பெற்றார். இதன்மூலம் அரசு அல்லது தனியார்  மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைப்பது உறுதியானது. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 1,800 இடங்கள் உள்ளன. இதில் 562 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். இந்த இடங்களில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களை  ெகாண்டே நிரப்ப வேண்டும். ஆனால், இதுகுறித்து மாணவர் சேர்க்கை குறிப்பில் எதுவும் குறிப்பிடவில்லை.

நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கவுன்சலிங் துவங்கியுள்ளது. இதில், வெளிமாநிலத்தவர் அதிகளவு சீட் பெறுவர். இவர்களுக்கு சீட் ஒதுக்குவதால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. எனவே, இதன் அடிப்படையில் நடக்கும் கவுன்சலிங்கிற்கு தடை  விதிக்க வேண்டும். கவுன்சலிங்கை ரத்து செய்து, நிர்வாக ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பட்டியல் வெளியிட்டு கவுன்சலிங் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், அரசு தரப்பில் தமிழக சுகாதாரத்துறை செயலரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22க்கு தள்ளி வைத்தார்.

Tags : MPPS Management,, Counsel, Explanation Quality, Icort Branch, Directive
× RELATED பொது விடுமுறை நாட்களில்...