வெள்ள உபரிநீரை திருப்ப 632 கோடியில் திட்டம்

பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் :

* நெல்லை, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக நீர்த்தேக்கம், ஏரி மற்றும் கசிவு நீர் குட்டை அமைக்கும் பணிகள் 137 கோடியே 42 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.

* நாகப்பட்டினம் மாவட்டம் மண்ணியாற்றின் குறுக்கே புதிதாக கடைமடை நீரொழுங்கி மற்றும் கரூர் மாவட்டம் நஞ்சை புகலூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கதவணை அமைக்கும் பணி₹505 கோடியில் மேற்கொள்ளப்படும்.

* 8 மாவட்டங்களில் 12 தடுப்பணைகள் 105 கோடியிலும், 2 மாவட்டங்களில் 2 அணைகட்டுகள் ₹9.94 கோடியிலும், 2 மாவட்டங்களில் 2 படுகை அணைகள் 13.50 கோடியிலும் மேற்கொள்ளப்படும்.

* தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் 5 இடங்களில் வெள்ள உபரி நீரினை திருப்பும் பணிகள் 632 கோடியில் மேற்கொள்ளப்படும்.    

* 3 மாவட்டங்களில் 4 இடங்களில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் 3.75 கோடியில் மேற்கொள்ளப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் குளவாய் ஏரியினை மீட்டெடுத்து, சென்னையின் நீட்டிக்கப்பட்ட புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரம் மேம்படுத்தும் திட்டம் 90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* 9 மாவட்டங்களில் 9 பாசன கட்டுமானங்கள் 30.80 கோடியில், 10 மாவட்டங்களில் 13 கால்வாய்கள் 156.28 கோடி மதிப்பீட்டிலும், 4 மாவட்டங்களில் 4 பாசன ஏரிகள் 285 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* விழுப்புரம், நாகை, அரியலூர், கரூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 இடங்களில் புதிய பாசன திட்டங்கள் குறித்த ஆய்வு பணிகள் மற்றும் மட்டளவு எடுக்கும் பணிகள் ₹5.86 கோடியில்  மேற்கொள்ளப்படும்.

* ஹோல்ட்ஸ்வர்த் அணைகட்டின் பூங்காவினை மேம்படுத்துதல், மண்தன்மை மற்றும் ஆராய்ச்சி கோட்டத்தின் ஆய்வகங்களுக்கு நவீன பரிசோதனை கருவிகள் வழங்குதல் மற்றும் திருச்சி திட்ட உருவாக்க வட்ட அலுவலகம் சீரமைக்கும் பணி  ஆகியவை 1.91 கோடியில் மேற்கொள்ளப்படும்.

* சைதாப்பேட்டை, தாடண்டர்நகரில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் கழிவு நீர் மறுசுழற்சி அமைப்பு, மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் அமைப்பு 3.70 கோடியில் அமைக்கப்படும்.

Related Stories: