×

சென்னையில் 18 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்

* 1,122 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள்
* பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க 18 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மானியக்கோரிக்கையின்போது  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:t சென்னை பெருநகர பகுதியில் 9 இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள் கட்டவும் மற்றும் ஒரு இணைப்பு சாலை அமைக்கவும், ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை ₹2.35 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.
* திருமங்கலம் - முகப்பேர் சாலையில் உள்ள டிஏவி பள்ளி மற்றும் வேலம்மாள் பள்ளி அருகில் நடைமேம்பாலம் அமைக்கவும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து பணிமனை அருகில் சாலை மேம்பாலம் அமைக்கவும் விரிவான திட்ட  அறிக்கை ₹65 லட்சத்தில் தயாரிக்கப்படும்.
* காஞ்சிபுரம்  மாவட்டத்தில் படப்பை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்வட்ட சாலை, ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.வி.என்.பள்ளி முதல் சுவஸ்திக்கார்னர் வரை, தேனி மாவட்டத்தில் நேரு சிலை, திருப்பூர் மாவட்டத்தில் சந்தை  பேட்டை, மதுரை மாநகரில் மாட்டு தாவணி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையம் ஆகிய 7 இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை மேம்பாலங்கள் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.  
* புறவழிச்சாலைகள் அவலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விருதாச்சலம், பாப்பாரப்பட்டி, ஜலகண்டாபுரம், அவிநாசி, கூடலூர், துறையூர், தேனி, போடிநாயக்கனூர் ஆகிய  10 நகரங்களில் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
* கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் திருவான்மியூர் லேட்டிஸ் பால சாலை சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி, கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழித் தடத்திலிருந்து ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி மற்றும்  தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணி ஆகியவை ₹ 299 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். மேலும், சென்னை ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் இரண்டு ‘ U ’வடிவ மேம்பாலங்கள் ₹ 110 கோடி மதிப்பில் கட்டப்படும்.  
* சென்னை பெருநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காட்டுபாக்கம், அக்கரை, அம்பத்தூர், ஆவடி, மாதவரம், ராமாபுரம், குன்றத்தூர், கைவேலி, சேலையூர், கொரட்டூர், வடபழனி -  பி.டி.ராஜன் சாலை சந்திப்பு,  மத்தியகைலாஷ் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய 13 இடங்களில் சாலை மேம்பாலம், பாடிகுப்பத்தில் ஒரு உயர்மட்ட பாலம், கேந்திரிய வித்தியாலயா மற்றும் தாம்பரத்தில் உயர்மட்ட நடைபாதை, கொரட்டூரில் ஒரு ரயில்வே மேம்பாலத்தை  அகலப்படுத்துதல் மற்றும் அம்பத்தூரில் ரயில்வே மேம்பாலம் ஆகிய பணிகள் சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்தில் புதிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கு தேவைப்படும்  நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் முதற்கட்டமாக ₹1122 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்


Tags : Fairs, built,18 locations , Chennai
× RELATED ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை...