நிறைய மேம்பால பணிகள் மந்தகதியில் நடக்கிறது

* திமுக அடுக்கடுக்கான கேள்வி

* முதல்வர் காரசார விவாதம்
Advertising
Advertising

தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா: மேடவாக்கம், செங்கல்பட்டு இடையே 6 வழிச்சாலை அமைக்கப்பட இருப்பதாக 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இன்னும் திட்டம் தொடங்கப்படவில்லை. நிறைய மேம்பாலங்கள் மந்த  நிலையில் நடக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுவதாக உறுப்பினர் இங்கே கூறினார். இடையில் மணல் பிரச்னை இருந்தது. அதனால் தான் தாமதம். போரூர் மேம்பாலத்தை அதிமுக ஆட்சியில் தான் கட்டி முடித்தோம். எஸ்.ஆர்.ராஜா: சென்னையில் இன்றைக்கு தாம்பரம் தான் போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த பகுதி. சாலை அமைக்கும் போதே அதை முதல்வர் நேரில் பார்த்த வரலாறு திமுக ஆட்சியில் தான் நடந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நீங்கள் ஒரு முறை தான் பார்த்தீர்கள். நாங்கள் தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பெருங்களத்தூர் பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். எஸ்.ஆர்.ராஜா: கூவம் நதியை சீரமைக்க கோரி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காததால் தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர்: 2012ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் ₹2 கோடி அபராதம் விதித்தது. 2022ம் ஆண்டுக்குள் கூவம், அடையார், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தமிழக அரசு சார்பில் ஐகோர்ட், தேசிய  பசுமை தீர்ப்பாயத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் விளக்கத்தை ஏற்காமல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 100 கோடி அபராதம் விதித்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் 71,262 உள்ளது. அதில், 17,400 ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஆனால், அதில் உள்ள ஏழைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது உள்ளது. இருப்பினும் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி தகுந்த முடிவு  எடுக்கப்படும். எஞ்சிய ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்துவோம். எஸ்.ஆர்.ராஜா: தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் தாங்களாகவே முன்வந்து ஏரி, குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர்: பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நதிகளில் கழிவுநீர் கலக்காத வகையில், மாசுபட்ட நீரை மறுசுழற்சி மூலம் சுத்தம் செய்து ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: