×

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட இருந்த நிலையில் சந்திராயன்-2 விண்ணில் ஏவுவது நிறுத்திவைப்பு

*  ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு  * 10 நாட்களுக்கு பின் அடுத்த தேதி அறிவிக்க வாய்ப்பு

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று அதிகாலை சந்திராயன் - 2 விண்கலத்தை ஏவுவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து  திடீெரன அறிவிக்கப்பட்டதால், ராக்கெட் ஏவப்படுவதை பார்க்க ஆர்வமுடன் வந்திருந்த மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்தனர். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, முதன்முதலாக நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கி 312  நாள்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மேலும், மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் போன்ற தாதுக்களும் நிலவின்  பரப்பில் படிமங்களாக இருப்பதையும் சந்திராயன்-1 கண்டறிந்தது.இந்த சந்திராயன் விண்கலம் பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலம், நேற்று அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம்  ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் நேற்றுமுன்தினம் காலை 6.51 மணிக்குத் தொடங்கியது. சுமார் 44 மீட்டர் உயரம் கொண்ட 640 டன்  ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி-எம்.கே III, விண்கலத்தை செலுத்த தயாராக நிறுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திரா ஆளுநர் நரசிம்மன், ஆந்திரா முதல்வர்  ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் பார்வையிட வந்திருந்தனர்.

‘பாகுபலி’ என்று கூறப்படும் இந்த ராக்கெட், 3.8 டன் எடையுள்ள சந்திராயன் - 2 விண்கலத்தை சுமக்கப்போகிறது என்பதால் இந்த செல்லப் பெயரை பெற்றது. இதிலுள்ள லேன்டர் ‘விக்ரம்’ செப்டம்பர் 6ம் தேதி வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கும் என்று கூறப்பட்டது. சந்திராயன் -2 திட்டத்தை செயல்படுத்த இந்தியா இதுவரை ₹1000 கோடி செலவு செய்துள்ளது. நிலவை சுற்றி ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்’ என்ற சாதனம், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய  ‘லேண்டர்’ என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்’ என்ற சாதனம் என 3 சாதனங்கள் சந்திராயன் -2ல் இடம்பெற்றுள்ளன.இந்த 3 சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன.முதல் முறையாக  நிலவின் தென்துருவம் பகுதியில் ஆய்வு நடத்தும் நோக்கத்தில் சந்திராயன்-2 விண்கலம் செலுத்தப்பட இருந்ததால், உலக நாடுகள் அனைத்துமே இந்த மிஷனை உற்று நோக்கின. இந்நிலையில்தான், கவுன்ட் டவுன் நிறைவடைய இருந்த 56  நிமிடங்கள், 24வது வினாடியில், திடீரென நிறுத்தப்பட்டது.இதனால், ஹரிகோட்டாவில் குவிந்திருந்த பத்திரிகையாளர்களும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து வந்து குவிந்திருந்த மாணவ, மாணவிகளும் திடுக்கிட்டனர். மொத்தமாக அங்கு குழுமியிருந்த 7,000க்கும் மேற்பட்டோரும், ஏன், எதற்கு  என தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.சுமார் 10 நிமிடங்கள் இஸ்ரோ சார்பில் எந்த அறிவுப்பும் இல்லாத நிலையில், இஸ்ரோ தரப்பில் அதன் டிவிட்டர் பக்கத்தில் அதிகாலை 3.05 மணிக்கு சந்திராயன் - 2 ஏவப்படுவது தற்காலிகமாக  நிறுத்தப்படுவதாகவும், மறுபடியும் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தது.

இதனால் திடீர் ஏமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் புதிது கிடையாது. இவற்றை சரி செய்து, இஸ்ரோ இதற்கு முன்பாகவும் சாதித்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் விண்வெளி ஆய்வின்போது,  இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்ட வரலாறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதுெதாடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தங்களுக்கு கிடைத்த உயர்மட்ட தகவல்கள் அடிப்படையில் வெளியிட்ட  செய்தியில், ‘கிரையோஜெனிக்கில் எரிபொருள் ஏற்றப்படும் போது, 1 மணி நேரத்துக்கு முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்த கோளாறு குறித்து சில மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முதலில், ராக்கெட்டில்  ஏற்றப்பட்ட எரிபொருளை காலி செய்ய வேண்டும்.
பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு ெதாடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த செயல்முறைகளை முடிக்க 10 நாட்கள் தேவைப்படலாம். அதன்பிறகுதான், சந்திராயன் - 2 ஏவப்படுவது ெதாடர்பான அட்டவணை  வெளியிடுவதை தீர்மானிக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளது.

Tags : paid ,Sriharikot,a Chandrayaan-2
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...