×

கட்சி தாவல் தடை சட்டத்தை கேலிக்கூத்தாவதை தடுக்க விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்நாடகத்தில் ஆரோக்கிய அரசியல் நிலவவில்லை. பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில், 13 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்கள் என்றால், அதன் பின்னணியில் பெரிய லாபம் இருப்பதாகத்தான்  பொருளாகும். கட்சி தாவலை தடுக்க வேண்டும் என்பதற்காகதான் கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த சட்டம் இப்போது கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தின்படி 3ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் அணி  மாறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதை பயன்படுத்திதான் கோவாவில் 10 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளும் பாஜவுக்கு அணி மாறினார்கள். கர்நாடகத்தில் அணி மாறும் உறுப்பினர்களுக்கு அந்த அளவுக்கு வலிமை  இல்லாததால்தான், அவர்கள் பதவி விலகி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயனடையப் போவது யார் என்பது அனைவரும் அறிந்ததே.

கட்சி தாவல்கள், வாக்களித்த மக்களுக்கு பிரதிநிதிகள் கிடைக்காதது உள்ளிட்ட அனைத்து தீர்வுகளுக்கு ஒரே தீர்வு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்வது மட்டும்தான். அப்போது கட்சி தான் முன்னிறுத்தப்படுமே தவிர  தனிநபர்கள் முன்னிறுத்தப்பட மாட்டார்கள். இந்தியா போன்ற பலகட்சி அரசியல் முறை உள்ள நாடுகளுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அது குறித்த விவாதத்தை தொடங்க மத்திய அரசு முன்வர  வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : prevent mockery, legislation, Proportional, Ramadas ,
× RELATED டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க...