புதிய கல்வி திட்டத்தை எதிர்த்து விரைவில் மாபெரும் கருத்தரங்கம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தி.நகர் திருமலை தெருவில் அமைந்துள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில்  காமராஜர் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் அரும்பாக்கம் க.வீரபாண்டியன், எம்.எஸ்.திரவியம், சிவ  ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு சத்தியமூர்த்திபவனில் பெருந்தலைவரின் பொற்கால ஆட்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிந்துவெளி ஆய்வாளரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலகிருஷ்ணன், முனைவர் காளீஸ்வரன்  ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஊடகத் துறை தலைவர் கோபண்ணா வரவேற்றார். மூத்த தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, ஜெயக்குமார் எம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதிய கல்வி கொள்கை என்பது சமூக நீதிக்கு எதிரானது. புதிய கல்வி திட்டத்தை எதிர்த்து விரைவில் ஒரு கருத்தரங்கம் நடத்த இருக்கிறோம்.

Related Stories: