தனியார் பல்கலைக்கழக கட்டிடத்தின் 15வது மாடியில் இருந்து குதித்து பிடெக் மாணவன் தற்கொலை

* இரண்டு மாதத்தில் 4வது சம்பவம் * பொதுமக்கள் அதிர்ச்சி ; செங்கல்பட்டு அருகே பரபரப்பு

சென்னை: தனியார் பல்கலைக்கழக கட்டிடத்தின் 15வது மாடியில் இருந்து குதித்து, பிடெக் இறுதியாண்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 மாதத்தில் 4 தற்கொலைகள்  நடந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் எத்திகாவிளை பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன்கள் ராகவ் (22), தர்ஷன் (19). இருவரும் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிக்கிக்னறனர். ராகவ் 4ம் ஆண்டு படித்தார்.இந்நிலையில் நேற்று மதியம் ராகவ், பல்கலைக்கழக 15வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து ஜன்னல் கண்ணாடியை திறந்த அவர், திடீரென மாடியில் இருந்து குதித்தார். இதில், அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ  இடத்திலேயே இறந்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், இறந்த ஸ்ரீராகவ் சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்ததை போலீசார் கண்டெடுத்தனர். அதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும், அவர் அரியர் வைத்திருந்த பாடங்களை முடிக்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா, கல்லூரி கல்லூரி நிர்வாகம் டார்ச்சர் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதல் விவகாரமா என்பது உள்பட  பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.கடந்த 2 மாதத்துக்கு முன் அடுத்தடுத்து 2 நாட்களில் பொன்னேரியை சேர்ந்த பிடெக் 2ம் ஆண்டு மாணவி அனுப்பிரியா விடுதி கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்தும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனுப்சவுத்ரி என்ற மாணவன் 4வது  மாடியில் இருந்தும், வந்தவாசியை சேர்ந்த நோயாளி ஒருவர் மருத்துவமனை கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. காட்டாங்கொளத்தூர் தனியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடக்கும் தற்கொலை சம்பவத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: