×

நிபந்தனைக்கு கட்டுப்பட்டால் ஈரான் கப்பல் விடுவிக்கப்படும்: இங்கிலாந்து திட்டவட்டம்

லண்டன்:  ஈரான் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் விடுவிக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பின் தடையை மீறி சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானுக்கு சொந்தமான சூப்பர் டேங்கர் கிரேஸ் 1 கப்பலை, ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படை சிறைப்பிடித்தது. இதன் காரணமாக ஈரான் மற்றும் இங்கிலாந்து இடையே மோதல் ஏற்பட்டது.  இந்நிலையில், நிபந்தனையின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிப்பதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரேமி ஹண்ட் கூறுகையில், “ஈரானுடனான பிரச்னையை தீர்ப்பதற்கு விரும்புகிறோம். சிரியாவுக்கு எண்ணெய் எடுத்து செல்ல மாட்டோம் என உத்தரவாதம் அளித்து, நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருக்கிறோம்” என்றார். ஆனால், இங்கிலாந்தின் நிபந்தனையை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது. எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த முடியாது என ஈரான் தெரிவித்துள்ளதோடு, கப்பலை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.


Tags : Iran ship,freed, conditional, UK proposal
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...