சில்லி பாயின்ட்...

* வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி ஜூலை 19ம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த தொடரில் கேப்டன் கோஹ்லி, வேகப் பந்துவீச்சாளர் பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாளறிவன் 251.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். சக வீராங்கனை மெஹுலி கோஷ் (250.2) வெள்ளிப் பதக்கமும், பிரான்சின் மரியன்னே முல்லர் வெண்கலமும் வென்றனர்.
* ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வீரர்கள் கோஹ்லி, பூம்ரா முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்களை புதிதாக நியமிக்க பிசிசிஐ சார்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதால், சாஸ்திரி மற்றும் சக பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Chili Point ...
× RELATED சில்லி பாயின்ட்...