பணகுடி ரேசன் கடையில் தனியார் பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவதால் பொதுமக்கள் அதிருப்தி

பணகுடி: பணகுடி பாஸ்கராபுரம் பகுதியில் சர்வதோயா அருகில் உள்ள அரசு ரேசன் கடையில் சீனி, பாமாயில், மண்னெண்னைய், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொருட்களை வாங்க வரும் மக்களிடம் சோப்பு, சாம்பு, சேமியா, தேயிலை உள்ளிட்ட தனியார் பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தபடுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, மாதாமாதம் வழங்கவேண்டிய பாமாயிலை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வழங்குகின்றனர். கேட்டால் மேல் அதிகாரிகள் அப்படிதான் வழங்க சொல்வதாக கூறுகின்றனர். மேலும் 50 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் 25 ரூபாய்க்கு சேமியா பாக்ெகட் வாங்க கட்டாயப்படுத்துவதால் அடிக்கடி பொதுமக்களுக்கும் ரேசன் கடை ஊழியர்களுக்கும் தகராறு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டால் எந்த பதிலும் இல்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: