×

தற்போதைய காலகட்டத்தில் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது: புதுவை முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: பிறந்த நாளுக்காக விளம்பரம் செய்ய பயன்படுத்தும் தொகையை பள்ளிகளுக்கு பயன்படுத்துங்கள் என்று கூறியவர்தான் காமராஜர் என புதுச்சேரி முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர்  காமராஜரின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காமராஜரின் உருவ  படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, இந்த கால கட்டத்தில் பிறந்த நாள் கொண்டாடனும்னா பேனர்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் காமராஜர் காலத்தில் பிறந்த நாளுக்காக விளம்பரம் செய்ய  பயன்படுத்தும் தொகையை பள்ளிகளுக்கு பயன்படுத்துங்கள் என்று கூறியவர்தான் காமராஜர் என்றார். இந்த காலகட்டத்தில் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் அதிகமாக சம்பாதிக்கனும் என்று  நினைக்கின்றனர். அரசியலில் தியாக மனப்பான்மை இருக்க வேண்டும்” என்று நாராயணசாமி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினோம். ஆனால் அதனை அவர் செய்யாமல் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி  விலகிவிட்டார். ஆனால் உண்மையில் 17 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள்தான் பதவி விலக வேண்டும். அவர்கள் யாரும் பதவி விலகவில்லை. அதற்கு மாற்றாக  தலைவர் ராகுல் பதவியிலிருந்து  விலகினார். நாட்டின் விஷ பூச்சியாக ஆர் எஸ் எஸ் இயக்கம் உள்ளது. அவர்கள்தான் மதத்தின் பேரில் நாட்டை துண்டாக்க பார்க்கிறார்கள். இந்தியாவிலுள்ள 15 கோடி இஸ்லாமியர்களை வெளியேற்றவும் துடிக்கிறார்கள்” என்றார்.

Tags : Politics has become a business in the present: Narayanasamy's speech to the new CM
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...