×

பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில் சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடக்கம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னதாக மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை சேமிக்க காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சியினர் கேள்விக்கு பதில் அளித்தார். பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகள் மானியக் கோரிக்கை  மீதான விவாதத்தின்  மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அவர் வாசித்த அறிவிப்புகள் பின்வருமாறு :

*திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 2018-ல்  6 ரயில்வே மேம்பாலங்கள் ரூ.247கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

*ரூ.2,991கோடி செலவில் 10,487 கி.மீ சாலையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

*சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்
கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன

*மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்.

*சென்னை பெருநகர பகுதிகளில் ரூ.1,122 கோடியில் 18 பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் .13 மேம்பாலங்கள், 2 ரயில்வே பாலங்கள், 2நடை மேம்பாலங்கள், 1 ஆற்றுப்பாலம் அமைக்கப்படும்.

*சேலையூர், கொரட்டூர், வடபழனி, மத்திய கைலாஷ், மடிப்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

*பாடி குப்பத்தில் உயர்மட்டப் பாலம், கேந்திரியா வித்யாலயா, தாம்பரத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்.

*சென்னையில் 9 இடங்களில் பாலம் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.2.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட ரூ.3.50 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

*ரயில்வே மேம்பாலங்கள் 3 இடங்களில் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.1.08 கோடி செலவில் தயாரிக்கப்படும்.

*சாலை மேம்பாலங்கள் 7 இடங்களில் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

*புற வழிச்சாலைகள் 10 நகரங்களில் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.   

*ரூ.155.80 கோடி மதிப்பீட்டில் 17 மாவட்டங்களில் 42 ஆற்று பாலங்கள் கட்டப்படும்.

*1456 கிமீ நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

*தமிழ்நாட்டில் உள்ள நெல்லை, சேலம், விழுப்புரம்  மாவட்டங்களில் ரூ.137.42கோடியில் புதிய ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்படும்.

*நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைகுறிச்சியில் எலுமிச்சை ஆற்றின் குறுக்கே ரூ.110கோடி செலவில் நீர்த்தேக்கம் உருவாக்கப்படும்.

*சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சொக்கனூர் அக்ரஹாரத்தில் பொன்னி ஓடையின் குறுக்கே ரூ.27கோடியில் புதிய ஏரி அமைக்கப்படும்.

*விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மங்கலத்தில் ரூ.42 லட்சத்தில் கசிவு நீர்க்குட்டைகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   

*தமிழகத்தின் இரு மாவட்டங்களில் கடைமடை நீரொழுங்கி, கதவணை அமைக்கும் பணிகள் ரூ.505 கோடியில் மேற்கொள்ளப்படும்.  

*கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

*பாதியில் நிற்கும் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டப்பணி மீண்டும் தொடங்கப்படும்.



Tags : Perungalthur, Singaperumal, CM Palanisamy, Highway Department
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...