இமாச்சலப்பிரதேச ஆளுநர் ஆச்சார்ய தேவ்ராட் குஜராத் ஆளுநராக மாற்றம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

டெல்லி: இமாச்சலப்பிரதேச ஆளுநர் ஆச்சார்ய தேவ்ராட்-ஐ குஜராத் மாநில ஆளுநராக மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  உத்தரவிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு முதல் இமாச்சல பிரதேச ஆளுநராகவும், அதற்கு முன் ராஜஸ்தான் ஆளுநராகவும் பதவி வகித்து வந்த ஆச்சார்ய  தேவ்ராட்-ஐ பஞ்சாபில் பிறந்தவர். மாநிலத்தில் போதைப்பொருள் உட்பட பல சமூக தீமைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட  பெருமைக்குரியவர். ஏற்கெனவே குஜராத் ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் கோலி பதவிக்காலம் நாளையோடு முடியும் நிலையில், 4 ஆண்டுகளாக  இமாச்சல் ஆளுநர் பொறுப்பில் இருந்த ஆச்சார்ய தேவ்ராட்-ஐ குஜராத் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இமாச்சப்பிரதேசத மாநில ஆளுநராக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த  தலைவரான கல்ராஜ் மிஸ்ரா மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். கடந்த 2014ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் டியோரியா  தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் நியாஸ் அகமதுவை விட சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம்  வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

சிறுகுறு தொழில்துறையின் கேபினட் அமைச்சராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி விலகினார். ஆர்எஸ்எஸ்  இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக பதவி விலகிய அவர், கடந்த ஆகஸ்டு 2018 வரை நாட்டின் பாதுகாப்பு நிலைக்குழுவில் உறுப்பினராக  பணியாற்றினார். இந்நிலையில் நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்ற தேர்தலில் கல்ராஜ் மிஸ்ரா போட்டியிடவில்லை. இந்த சூழலில் அவரை  ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: