பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக 8 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது உ.பி. அரசு !!

லக்னோ : பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக 8 அதிகாரிகளை உத்தரப் பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்து புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு கோசாலைகளில் அண்மையில் இடி தாக்கியதாலும் நோய் உற்றத்தாலும் 35 பசுமாடுகள் உயிரிழந்தன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைவர்களுடன் காணொலியில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோசாலை பராமரிப்பில் அலட்சியம் காட்டிய 8 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தார்.

மேலும் பசுக்கள் உயிரிழப்பு குறித்து விளக்கம் அளிக்க கோரி ப்ரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 3 உயரதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும்  முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சரின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதனை பாரதிய ஜனதா நியாயப்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் பசு பராமரிப்பில் அரசு ஊழியர்கள் அலட்சியம் காட்ட கூடாது என்றும் ஆதித்யநாத் கூறியுள்ளார். மீறினால் கால்நடை பராமரிப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே இது குறித்து பேசிய பாஜகவின் மனேஜ் மிஸ்ரா,பசுக்கள் பாதுகாப்புக்கு உ.பி.அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; ஆதித்யநாத் ஆட்சியில் அவை ஆரோக்கியது இருப்பதுடன் நல்ல உணவும் கிடைக்கிறது; அவர் பசுக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார்; அவரது ஆட்சியில் இது போன்று பல தருணங்களில் முக்கிய திட்டங்களை எடுத்திருக்கிறார், என்று கூறினார்.

Related Stories: