கர்நாடக சட்டப்பேரவையில் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த இரண்டு வாரமாக உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. கூட்டணியின் மீது அதிருப்தியடைந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதில் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து கடிதம் கொடுத்தனர். மேலும் மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் மும்பையில் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இவர்களில் 10 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தில் போதிய விளக்கம் இல்லை என்று கூறி சபாநாயகர் நிராகரித்துவிட்டார்.

தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க உத்தரவிடகோரி உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்எல்ஏக்களை சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவிட்டதுடன், அவர்களின்  ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 10 எம்எல்ஏக்கள் கடந்த வியாழக்கிழமை மும்பையில் இருந்து பெங்களூரு வந்து சபாநாயகர் முன் ஆஜராகி மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இந்நிலையில் சபாநாயகர் முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று ரமேஷ்குமார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தின் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது. தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு நாளைய தேதி-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இதற்கிடையில் இன்று கர்நாடகா சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக கர்நாடக அலுவல் ஆய்வு கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் தலைமையில் இந்த கூட்டம் கூடிய கூடியது. இதில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தொடங்கியதும் பாஜக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் அரசுக்கு எதிராக கொண்டு வருவதாக சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது பாஜக சார்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் உடனே நடைபெற வேண்டும் என்று பாஜக தரப்பில் சபாநாயகருக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது முடிவெடுத்த சபாநாயகர் வரும் 18-ம் தேதி அதாவது வியாழக்கிழமை காலை 11 மணிக்கு இந்த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தனது முடிவை சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Related Stories: