மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் 63.95 ஆக இருக்கிறது: மத்திய அரசு தகவல்

டெல்லி: சராசரி நபரின் ஆயுட்காலம் 67 வயதாக உள்ளநிலையில் மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் 63.95 ஆக இருக்கிறது. இந்தியாவில் தனிநபர்களை விட மலைவாழ் மக்களின் ஆயுட்காலம் குறைவானது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. மருத்துவ வசதி, கல்வியறிவு இல்லாமை போன்றவற்றால் மலைவாழ் மக்களின் ஆயுள் குறைவதாக ஆய்வில் தகவல் வந்துள்ளது.

Related Stories: