அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதியாகும் ஸ்டீல்: உற்பத்தியாளர்கள் கவலை

புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவை உள்நாட்டில் விற்பனை செய்வதை விட மலிவான விலையில் ஏற்றுமதி ஆகிறது. எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஸ்டீஸ் ஏற்றுமதி விலை குறைந்த பட்சம் சர்வதேச விலைக்கு இணையாக இருக்க வேண்டும் என ஸ்டீல் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  ஆனால் வெளிநாட்டில் விற்பனை ஆவதை விட உள்நாட்டில் டன்னுக்கு ₹5,000 அதிகமாக உள்ளது. எனவே, உள் நாட்டில் விற்பனை செய்யப்படும் விலையையே ஏற்றுமதிக்கான குறைந்த பட்ச விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து மலிவு ஸ்டீல் இறக்குமதியை கட்டுப்படுத்த 25 சதவீத பொருள் குவிப்பு வரியை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதனால் ஸ்டீல் விலை உள்நாட்டில் உயரும், பொருளாதாரத்தை பாதிக்கும் என ஸ்டீல் நுகர்வோர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: