கர்நாடகா, ஆந்திராவில் நெல் விளைச்சல் சரிவால் அரிசி மூட்டைக்கு ₹400 அதிகரிப்பு

சேலம்: கர்நாடகா, ஆந்திராவில் நெல் விளைச்சல் குறைந்ததால், அரிசி மூட்டைக்கு ₹400 வரை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், நெல் விளைச்சல் எதிர்பார்த்த அளவில் இல்லை. அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மழை சற்று கை கொடுத்ததால், நடப்பாண்டு தமிழகத்தை விட நெல் விளைச்சல் நன்கு உள்ளது. ஆனால், இந்த இரு மாநிலங்களிலும் இருந்து தமிழகத்திற்கு அரிசி வரத்து, வழக்கத்தை விட  குறைந்து விட்டது. இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை அரிசி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:இந்தியாவிலேயே தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தான் நெல் சாகுபடி அதிகம். சேலம் செவ்வாய்பேட்டை, லீ பஜாருக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் இருந்து, அரிசி வரத்து தொடங்கி ஏப்ரல் மாத இறுதி வரை இருக்கும். நடப்பாண்டு, வழக்கம்போல் மார்ச் முதல் வாரத்தில் அரிசி வரத்து தொடங்கியது. ஆனால், உள்ளூரில் இருந்து அரிசி வரத்து 30 சதவீதம் சரிந்தது. அதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வழக்கத்தை காட்டிலும், 20 சதவீதம் வரத்து குறைந்துள்ளது.

 இதனால் கடந்த 3 மாத ங்களில் அரிசி விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் இருந்து  இதுவரை அரிசி மூட்டைக்கு (100 கிலோ) ₹400 அதிகரித்துள்ளது. ₹5000க்கு விற்ற ெபான்னி புழுங்கல் ₹5400 எனவும், ₹4600க்கு விற்ற ராஜபோகம் ₹5000 எனவும், ₹4800க்கு விற்ற பிபிடி ₹5200 எனவும், ₹3400க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி ₹3800 எனஅதிகரித்துள்ளது. இதேபோல் மற்ற ரக அரிசியும் மூட்டைக்கு ₹300 முதல் ₹400 வரை அதிகரித்துள்ளது என்றனர். அரிசி மூட்டைகள் பதுக்கல்?நடப்பாண்டு நெல் விளைச்சல் சரிவு காரணமாக, மார்க்கெட்டுக்கு அரிசி வரத்து குறைந்துள்ளது. இதை பயன்படுத்தி பதுக்கல்காரர்கள் குடோன்களில்  அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே நிலவுகிறது. எனவே ஆலைகள், குடோன்களில் ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் அரிசி மூட்டைகளை இருப்பு வைத்திருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: