ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.35,000 கோடியை தாண்டும்

புதுடெல்லி,: ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வரும் 2024-25 நிதியாண்டில் ₹35,000 கோடியை தாண்டும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.  வெளிநாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வரும் 2024-25 நிதியாண்டில் ₹35,000 கோடியை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி துறை செயலாளர் அஜய் குமார் கூறியதாவது: ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி அபரிமிதமாக அதிகரித்து வருகிறது.  கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி ₹10,700 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இலக்கு ₹20,000 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் ₹5,600 கோடி மதிப்பிலான தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுவே சாதனை அளவுதான்.

 இதற்கு முன்பு கடந்த 2016-17 நிதியாண்டில் ஏற்றுமதி ₹1,500 கோடியாகத்தான் இருந்தது. 2017-18ல் ₹4,500 கோடியாக உயர்ந்தது. ராணுவ பொருட்கள் உற்பத்தியில் தனியார் துறை ஈடுபடுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையினரை மிகவும் ஊக்குவிக்கிறது. இதற்கேற்ப ஏற்கெனவே இருந்த ராணுவ தளவாடங்கள் மற்றும் பொருட்கள் உற்பத்தி கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றார்.

Related Stories:

>