×

நேபாள மழை பலி 43 ஆக உயர்ந்தது: 24 பேரை காணவில்லை

காத்மாண்டு: நேபாளத்தில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், மழையினால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 10,385 வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளன. 27,380 போலீசார் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1,104 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

மழை, நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி நேற்று முன்தினம் 28 பேர் பலியாகினர். இந்த பலி எண்ணிக்கை நேற்று 43 ஆக உயர்ந்தது. இதில், பெண்களின் எண்ணிக்கை 18. மேலும், 20 பேர் காயம் அடைந்துள்ளனர். 24 பேரை காணவில்லை.
பாக்மதி, காமாலா, சப்தகோசி மற்றும் அதன் கிளை ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், அந்த பகுதிகளில் உள்ளவர்களை அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

Tags : Nepal rain ,kills,missing
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...