×

வங்கதேசத்தில் முன்னாள் அதிபர் எர்ஷாத் மரணம்

தாகா: வங்கதேசத்தின் முன்னாள் அதிபரான ஹூசைன் முகமத் எர்ஷாத் உடல் நலக்குறைவால் நேற்று காலை மரணமடைந்தார். வங்கதேசத்தில் அதிபராக இருந்தவர் ஹூசைன் முகமத் எர்ஷாத் (91). இவர் 1982ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். 1990களில் வங்கதேசத்தின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.45 மணிக்கு அவர் மரணமடைந்தார். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு இரங்கல் தெரிவித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். வங்கதேசம்-இந்தியா உடனான சிறந்த உறவில் எர்ஷாத்தின் பங்கு எப்போதும் நினைவுகூரத் தக்கது,’ என்று கூறியுள்ளார்.

Tags : Bangladesh, Former President, Death , Ershad
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...