×

தொடர்ச்சியாக 11வது வெற்றி விஜேந்தர் அசத்தல்

நியூயார்க்: தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில், இந்திய வீரர் விஜேந்தர் சிங் தொடர்ச்சியாக 11வது வெற்றியை வசப்படுத்தி அசத்தியுள்ளார்.அமெரிக்காவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் முதல் முறையாக நேற்று களமிறங்கிய விஜேந்தர் (33 வயது, அரியானா) உள்ளூர் நட்சத்திரம்  மைக் ஸ்நைடரை எதிர்கொண்டார். நியூயார்க் நகரின் புருடென்ஷியல் மையத்தில் நடைபெற்ற இந்த போட்டி 4 சுற்றுகள் நீடித்தது. அமெரிக்க வீரரின் தாக்குதலை சமாளித்து திறமையாக செயல்பட்ட விஜேந்தர் டெக்னிகல் நாக்-அவுட் செய்து தொடர்ச்சியாக 11வது வெற்றியை பதிவு செய்தார்.இதில் அவர் 8 முறை நாக்-அவுட் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijender , consecutive ,,winner, Wacky
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட பனியன்...