விம்பிள்டன் டென்னிஸ் பைனல் பெடரர் - ஜோகோவிச் உற்சாகம்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் நேற்று மோதினர். பரபரப்பான இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இருவரும் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.

* விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கொலம்பியாவின் ஜுவன் செபாஸ்டியன் கபால் - ராபர்ட் பாரா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பிரான்சின் நிகோலஸ் மகுத் - ரோஜர் வேசலின் ஜோடியுடன் மோதிய கபால் - பாரா ஜோடி 6-7 (5-7), 7-6 (7-5), 7-6 (8-6), 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் 4 மணி, 57 நிமிடம் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

* கலப்பு இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் இவான் டோடிக் - லதிஷா சான் (தைவான்) இணை கோப்பையை முத்தமிட்டது. இறுதிப் போட்டியில் ராபர்ட் லிண்ட்செட் (ஸ்வீடன்) - ஜெலினா ஓஸ்டபென்கோ (லாத்வியா) ஜோடியுடன் மோதிய டோடிக் - லதிஷா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றது.

Related Stories: