×

தங்கம் வென்றார் வினேஷ் போகத்

இஸ்தான்புல்: துருக்கியில் நடந்த யாசர் டோகு சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 53 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்.பைனலில் ரஷ்யாவின் எகடரினா போல்ஷுக்குடன் நேற்று மோதிய வினேஷ் போகத் 9-5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். கடந்த வாரம் ஸ்பெயின் கிராண்ட் பிரீ தொடரில் தங்கம் வென்றிருந்த வினேஷ், தற்போது இஸ்தான்புல் தொடரிலும் முதலிடம் முடித்து முத்திரை பதித்துள்ளார்.



Tags : Vineesh Goat ,gold
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு