சில்லி பாயின்ட்...

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜாக் காலிஸ் மற்றும் துணை பயிற்சியாளர் சைமன் கேடிச் இருவரும் பதவி விலகி உள்ளனர். இவர்களுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கேகேஆர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணி, 2019 சீசனில் 5வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

* அடுத்த ஐபிஎல் சீசனில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகளை களமிறக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக சேர்க்கப்பட உள்ள 2 அணிகளின் உரிமத்தை வாங்க அதானி குழுமம் (அகமதாபாத்), கோயங்கா குழுமம் (புனே), டாடா நிறுவனம் (ஜாம்ஷெட்பூர்) உட்பட பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

* உலக கோப்பை அரை இறுதியில் தோற்றதற்காக இந்திய அணி வீரர்களை விமர்சிப்பதும், சிலரை அணியில் இருந்து நீக்கக் கோருவதும் முட்டாள்தனமானது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

* பிபா மகளிர் கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 6 இடங்கள் முன்னேறி 57வது இடத்தை பிடித்துள்ளது.

* இங்கிலாந்து அணியுடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்காக 25 பேர் கொண்ட உத்தேச அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதில் ஆல் ரவுண்டர்கள் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பெறவில்லை.

Related Stories: