உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

லண்டன்: இன்று நடைபெறும் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 77 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். குப்தில் 19, வில்லியம்சன் 30, டெய்லர் 15, நீசம் 19, லாதம் 47, க்ராண்ட்ஹோம் 16, சான்ட்னெர் 5, போல்ட் 1, ஹென்றி 4 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் புலன்கெட் 3, ஓக்ஸ் 3, உட் 1, ஆர்ச்சர் 1 விக்கெட் வீழ்த்தினர். 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோல் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: