உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகப்பற்றமாக நிகோல்ஸ் 55 ரன்கள், லாதம் 47 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் ப்ளென்கட், வோக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனை அடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Related Stories: