சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கான சோதனை

அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகள் 2000-கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிலையில் குடிபெயர்ந்து வாழும் பலர் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்றுவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று ஒரு வாரத்துக்கு முன்னர் டிரம்ப் தெரிவித்து இருந்த நிலையில், இதற்க்கான சோதனைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

இந்த சோதனைகளுக்கு எதிராக பலரும் கடந்த இரு நாட்களாக போராட்டம் நடத்திய நிலையில் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க முகவர்கள் அமெரிக்காவில் 10 முக்கிய நகரங்களில் அதிகாலை முதல் சோதனையை தொடங்கின. இந்த சோதனையில் அண்மையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய கிட்டத்தட்ட 2,000 பேரை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தாங்களும் கைது செய்யப்படலாம் என பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறி வீடு வேலை மற்றும் குடும்பத்தினருடன் இருப்பவர்களும் அச்சத்தில் உள்ளனர். பிள்ளைகள் குடியுரிமை பெற்ற நிலையில், குடியுரிமை பெறவில்லை என்பதால் பெற்றோர்கள் மற்றும் கைது செய்யப்படலாம் என அச்சம் நிலவுகிறது.

Related Stories: