ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4-ஆக பதிவு

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. அந்நாட்டு நேரப்படி 1.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதை தொடர்ந்து மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் ப்ரூம் நகரை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Related Stories: