ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி, ஐஎம்பிஎஸ் ஆன்லைன் பண பரிவர்த்தனை வங்கி கட்டணம் இனி இல்லை

புதுடெல்லி: நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ், ஆகிய ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளது. ரொக்கப் பண பரிவர்த்தனை இல்லாத பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் கேட்டுக் கொண்டது.  மொபைல் போன்கள் மூலம் உடனடி பண பரிமாற்றம் செய்தவற்கான கட்டணத்தையும் ஸ்டேட் பாங்க் ரத்து செய்துள்ளது. இந்த கட்டணச் சலுகை ஆகஸ்ட்1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆர்டிஜிஎஸ் முறை மூலம் ரூ.2 லட்சத்திற்கு மேல் அதிக அளவு மதிப்புக்கு ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம். என்இஎப்டி முறை என்பது ரூ.2 லட்சம் வரையில் மட்டும் ஆன் லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்.ஜூலை 1ம் தேதிக்கு முன்னர் வரையில் என்இஎப்டி மூலம் பண பரிவர்த்தனைக்கு ₹1 மற்றும் ₹5 கட்டணாக வசூல் செய்தது. அதேபோல், ஆர்டிஜிஎஸ் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு ரூ.5 முதல் 50 வரை கட்டணம் விதித்தது.2019 மார்ச்ச மாதம் வரையில் ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்திய எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமானவர்கள். அதேபோல், 1.41 கோடி பேர் மொபைல் போன் வங்கி சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

Related Stories: