விம்பிள்டன் டென்னிஸ் ஹாலெப் சாம்பியன்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் நேற்று மோதிய ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று முதல் முறையாக விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். ஹாலெப் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இப்போட்டி 56 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்றிருந்த அவர் தற்போது தனது 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வசப்படுத்தி உள்ளார். விம்பிள்டனில் 8வது மற்றும் ஒட்டுமொத்தமாக 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய செரீனா 2வது இடத்துடன் திருப்தியடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் - நோவாக் ஜோகோவிச் மோதுகின்றனர்.

Related Stories: