மஹிந்திரா பொலிரோ ஏபிஎஸ் மாடல் முன்பதிவு துவக்கம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில், சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிரைவர் சைடு ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓவர் ஸ்பீடு அலாரம், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும்  சீட்பெல்ட் ரிமைன்டர் 2019 ஜூலை முதல் அனைத்து கார்களிலும் இடம்பெறுவது அவசியம்.அதன்படி, மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி ரக ஜீப்பில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்புதிய மாடலுக்கு ஆன்லைன் மற்றும்  டீலர்களிடம் முன்பதிவு துவங்கி இருக்கிறது.புதிய மஹிந்திரா பொலிரோ வரும் அக்டோபரில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஒப்பானதாக இருக்கும் என தெரிகிறது. இதில், பிஎஸ்-6 இன்ஜின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மஹிந்திரா பொலிரோ  எஸ்யூவி ரக ஜீப்பில் 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பொலிரோ ப்ளஸ் மாடலில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. இந்த  இன்ஜின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மஹிந்திரா பொலிரோ தற்போதைய மாடல் ₹7.56 லட்சம் முதல் ₹9.42 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதைவிட சற்றே கூடுதல் விலையில் புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் அதிகம்  விற்பனையாகும் எஸ்யூவி மாடலான பொலிரோவில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் பொலிரோவின் மதிப்பை உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.  அதிகாரப்பூர்வமான விலை விவரம் ெவளியிடப்படவில்லை.


Tags : Mahindra ,Boleiro, ABS Model ,Launch
× RELATED தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா: என்...