×

புதிய மாருதி எர்டிகா கிராஸ்

கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்த இரண்டாம் தலைமுறை மாருதி எர்டிகா கார் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. கவரும் டிசைன், அதிக இடவசதி, புதிய இன்ஜின் தேர்வுகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கு  அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்நிலையில், மாருதி எர்டிகா காரின் சொகுசு மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மாருதி எர்டிகா கிராஸ் என்ற பெயரில் இந்த மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வர  உள்ளது. மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக இப்புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இப்புதிய கார், வெளிப்புறத்தில் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகளுடன் வசீகரமான அம்சங்களுடன் வருகிறது. முக்கிய விஷயமாக, நடுவரிசையில் பெஞ்ச் வகை இருக்கைக்கு பதிலாக இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இதனால், அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்கும் வர்த்தகர்கள், தொழிலதிபர்களுக்கு சிறந்த தேர்வாக மாறும்.

புதிய ஹெட்லைட் கிளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ரூப் ரயில்கள், புதிய முக அமைப்பு ஆகியவையும் சாதாரண  மாடலில் இருந்து வேறுபடுத்தும் விஷயங்களாக உள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த இன்ஜினுடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக  103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த கார், சொகுசு அம்சங்கள் அதிகம் கொண்ட  மாடலாகவும், மிடுக்கான தோற்றம் கொண்டதாகவும் வருவதால் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. சரியான பட்ஜெட்டில், சிறந்த சொகுசு அம்சங்களை பெற்ற மாடலாக இந்த கார் இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : New Maruti ,Ertiga Cross
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...