இந்திய சூப்பர் பைக் சந்தையில் கவாஸாகி நின்ஜா 1000 பைக் முதன்மையான தேர்வாக இருக்கிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், விசேஷமான புதிய வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கவாஸாகி நின்ஜா 1000 பைக் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் கேண்டி லைம் கிரீன் வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக மெட்டாலிக் மேட் பியூஷன் சில்வர் என்ற புதிய வண்ணத்திலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்புதிய சில்வர் வண்ண கலவையானது லிமிடெட் எடிசன் மாடலாக வந்துள்ளது.மொத்தமாகவே 60 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1,043 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 111 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில், முன்புறத்தில் 41 மி.மீ இன்வர்டெட் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மி.மீ டியூவல் டிஸ்க்குகளும், பின்புறத்தில் 250 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.