×

விசேஷ வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000

இந்திய சூப்பர் பைக் சந்தையில் கவாஸாகி நின்ஜா 1000 பைக் முதன்மையான தேர்வாக இருக்கிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், விசேஷமான புதிய வண்ணத்தில் கவாஸாகி நின்ஜா 1000 சூப்பர் பைக் விற்பனைக்கு  அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கவாஸாகி நின்ஜா 1000 பைக் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் கேண்டி லைம் கிரீன் வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக மெட்டாலிக் மேட் பியூஷன் சில்வர்  என்ற புதிய வண்ணத்திலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்புதிய சில்வர் வண்ண கலவையானது லிமிடெட் எடிசன் மாடலாக வந்துள்ளது.மொத்தமாகவே 60 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1,043 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 111 என்எம் டார்க்  திறனையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில், முன்புறத்தில் 41 மி.மீ இன்வர்டெட் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மி.மீ  டியூவல் டிஸ்க்குகளும், பின்புறத்தில் 250 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

இப்புதிய பைக்கில், எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், டிராக்க்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்லிப்பர் கிளட்ச், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட  ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. 19 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 1,440 மி.மீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 130 மி.மீ ஆக  உள்ளது. 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கவர்ச்சிகரமான டிசைன், செயல்திறன் மிக்க இன்ஜின் மற்றும் சரியான பட்ஜெட் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த விசேஷ வண்ண கலவையிலான கவாஸாகி  நின்ஜா 1000 பைக்கிற்கு ₹10.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Special, Coloring, Kavasaki NINJA 1000
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...